முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் இன்று (12.09) ஆறாவது நாளாக முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், 06 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இன்றைய அகழ்வு பணியின்போது கழிவு நீரை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் நீர் சுத்திகரிப்பு கருவி ஒன்றும், துப்பாக்கி ரவை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, திங்கட்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்ட எச்சங்களின் மிகுதி எச்சங்கள் இன்று முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்வாறு மீட்கப்பட்ட மனித எச்சங்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையிலோ, அல்லது கைகள் கட்டப்பட்ட நிலையிலோ மீட்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.