இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கு தெரிவாகி விளையாடி வரும் சாருஜன் சண்முகநாதனுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வொக்கார் யூனிஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இலங்கை அணி சார்பாக தனது திறமையை காட்டிய டுனித் வெல்லாளகேயின் திறமையை பாராட்டிய அவர், சாருஜனையும் வாழ்த்தியுள்ளார்.
சிறிய வயதில் பார்த்த திறமையான சிறுவன் வளர்ந்து விட்டார் எனவும், படிப்படியாக வளர்ந்து வருகிறார் எனவும் வொக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் 19 வயது அணிக்கெதிராக விளையாடும் இலங்கை 19 வயது அணியில் விக்கெட் காப்பாளர்/துடுப்பாட்ட வீரராக 17 வயதில் சாருஜன் இடம்பிடித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகள் 19 வயது அணிக்கெதிரான நான்கு நாட்கள் போட்டியில் 36 ஓட்டங்களை சாருஜன் பெற்று ஆட்டமிழந்திருந்தார்.