ரயில் ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலை தொடர்ந்து மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (14.09) பிற்பகலில் அனைத்து ரயில் நடவடிக்கைகளும் வழமைக்குத் திரும்பும் என லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர்ஸ் யூனியன் உறுதியளித்துள்ளது.
ஆட்சேர்ப்பு செயல்முறை திருத்தங்கள் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி குறித்த தொழிற்சங்கமானது கடந்த திங்கள்கிழமை நள்ளிரவில் இருந்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.