உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவிப்பு!

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி WWW.UGC.AC.LK என்ற இணையதளத்தின் வழியாக இன்று (14.09) முதல் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை முடிவுகள் கடந்த 04ஆம் திகதி வெளியிடப்பட்டன.

263,933 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில், அவர்களில் 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

Social Share

Leave a Reply