இன்றும் கடும் மழை – யாழ் பாடசாலைகள் மூடப்பட்டன

இலங்கையில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

யாழ் மாவட்ட செயலாளர் க.மகேசன் இதனை தெரிவித்தார்.

மாவட்டத்தின் பெரும்பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளமையினால் யாழ் மாவட்ட ஆளுநருடன் ஆலோசித்ததன் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டில் இன்றைய தினம் பல பகுதிகளிலும் மழையுடனான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதன்படி வடக்கு, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அநுராதபுரம், திருகோணமலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்களிலும் 150 மில்லிமீற்றருக்கு மேல் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் மாத்தளை, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழை பதிவாகுமெனவும் ஆகவே பலத்த காற்று வீசும் சந்தர்ப்பங்களில் ஏற்டக்கூடிய அபாயத்தை குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றும் கடும் மழை - யாழ் பாடசாலைகள் மூடப்பட்டன

Social Share

Leave a Reply