உலக கிண்ண இரண்டாம் சுற்று நிறைவு

உலகக்கிண்ண 20-20 தொடரின் இரண்டாம் சுற்றின் இறுதிப் போட்டி இன்று (8/11/2021) நமீபியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.


முதலில் துடுப்பாடிய நமீபியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றது. இதில் டேவிட் விஸே 26(25) ஓட்டங்களையும், ஸ்டெப்பென் பார்ட் 21(21) ஓட்டங்களையும், ஜான் பிரைலிங் ஆட்டமிழக்காமல் 15(15) ஓட்டங்களையும், மிச்செல் வன் லிங்கன் 14(15) ஓட்டங்களையும், ரூபென் ற்றுப்பெல்மென் ஆட்டமிழக்காமல் 13(6) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின்,ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்களையும், ஜஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். 133 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பாடிய இந்தியா அணி 15.2 ஓவர்களில் 1 விக்கெட்டினை இழந்து 136 ஓட்டங்களை பெற்றது.

இதில் ரோஹித் லோகேஷ் ராகுல் ஆட்டமிழக்காமல் 54(36) ஓட்டங்களையும், ரோஹித் ஷர்மா 56(37) ஓட்டங்களையும், சூரியகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 25(19) ஒட்டங்களையும் பெற்றனர். போட்டியின் நாயகனாக ரவீந்திர ஜடேஜா தெரிவு செய்யப்பட்டார்.

பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரை இறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன.

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது அரை இறுதிப் போட்டி 10 ஆம் திகதியும், அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இரண்டாவது போட்டியாக 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

உலககிண்ண தொடரோடு விராத் கோலி 20-20 போட்டிகளுக்கான தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார். ரவி ஷாஸ்திரி தலைமையிலான பயிற்றுவிப்பாளர் குழுவும் விலகுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

உலக கிண்ண இரண்டாம் சுற்று நிறைவு

Social Share

Leave a Reply