அனர்த்த நிலைகளின் போது முகம் கொடுக்கும் வகையில் இராணுவம், பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் தயாராக இருப்பதாக குறித்த மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சீரற்ற வானிலை நிலவி வரும் சந்தர்ப்பங்களின் போது பொதுமக்கள் மலையேற்றம் மற்றும் படகு சவாரி உள்ளிட்ட கேளிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்தவகையில், அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஏனையவர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சுதந்த ரணசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.