நாட்டில் அதிகரித்துவரும் டெங்கு நோயின் காரணமாக மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 59 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய டெங்கு கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.