தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார துணைத் தலைவருக்கு விளக்கமளிப்பு

பிரித்தானியாவின் இந்தியா, இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் (தென் ஆசியா)வலயத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் துணைத் தலைவர் கமிலா சுக்டன் Camilla Sugden (Deputy Head, India and India Ocean Directorate) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோருக்கிடையில் கடந்த 20 ஆம் திகதி சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது “எமது வட கிழக்கு தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் மற்றும் கொடுத்துவரும் பிரச்சனைகள் சம்பந்தமாக கலந்துரையாடி இருந்தேன். மே மாதத்துக்கு பின்னரான இலங்கைக்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் இல்லாதவிடத்து தற்பொழுது ஒருவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார் அதனடிப்படையில் இவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது” என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு நடைபெற்ற போது “தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் ஊர்வலத்தின் போது தாக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரகுமார் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தது. அது சம்பந்தமாகவும் எமக்கான உரிமைகள் மறுக்கப்படுதல் மற்றும் இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் அரசு நடந்து கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது” என சாணக்கியன் மேலும் கூறியுளளார்.

மயிலத்தமடு, மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு பற்றியும் திருகோணமலை மற்றும் பல பிரதேசங்களில் இடம்பெறும் அத்துமீறிய விகாரை அமைக்கும் நடவடிக்கைகள் பற்றியும் இந்த சந்திப்பின் போது விளக்கமளிக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply