பாதாள உலகக்குழு ஒன்றின் தலைவர் என கூறப்படும் ப்ரியந்த ஸ்ரீநந்த விசேட அதிரடிப்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். “வெலி சுதா” என அழைக்கப்படும் இவர் இத்தாலிய நாட்டு தயாரிப்பான அரை தானியங்கி பிஸ்டல் ஒன்றுடன் கொழும்பு, அங்கொடை முல்லேரியவெவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் பிரதம பொலிஸ் அத்தியட்சகர் விஜயரட்னவுக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது வெலி சுதா கைது செய்யப்பட்டுள்ளார். 50 வயதான இவர் அங்கொடை பகுதியை சேர்ந்தவர் எனவும், குற்றச்செயல் ஒன்றுக்காக தயாராகவிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
கைப்பற்றபட்ட துப்பாக்கி மற்றும் மகசீன் என்பன மேலதிக விசாரணைகளுக்காக முல்லேரியவெவ பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.