காலியில் வர்த்தகர் ஒருவர் பலி!

காலியில் நேற்று (23.09) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

லலித் பிரசாந்த மெண்டிஸ் என்ற வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போது, ​​துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Social Share

Leave a Reply