ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை (01.10) முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, வர்த்தமானியை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் சுபுன் எஸ்.பத்திரகே தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இது தொடர்பான சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.