மாத்தறை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நில்வளா கங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதன்படி, அக்குரஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியானது, பரடுவ பிரதேசத்தில் இருந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அவ்வீதியின் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இதனால் மாற்று வீதியாக அக்குரஸ்ஸ – ஹொரகொட ஊடாக மாத்தறை வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அக்குரஸ்ஸ – சியம்பலாகொட வீதியும் பாணடுகம பிரதேசத்தில் இருந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அக்குரஸ்ஸ – கபுருபிட்டிய வீதி மற்றும் அக்குரஸ்ஸ – மாகந்துர வீதி என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.