மஹியங்கனை ரஜமஹா விகாரையின் ரந்தோலி பெரஹெராவின் போது “சீதா” என்ற யானை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தை அடுத்து மாபாகட வெவ வனவிலங்கு பிராந்திய அலுவலகத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (30.09) அதிகாலை 03.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காட்டு யானை என எண்ணி யானை தவறுதலாக சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.