மின்சார கட்டணம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் அபிப்பிராயத்தை பெற்று இறுதி முடிவு எடுக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உத்தேச செலவு அதிகரித்துள்ளதாக தெரிவித்த மின்சார சபை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை திருத்தியமைக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

நீர்மின்சாரம் மற்றும் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி குறைந்துள்ளமை மற்றும் மின் தேவை அதிகரிப்பு ஆகியவையே இதற்கான காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்சாரக் கட்டணங்களை இரண்டு வழிகளில் திருத்துவதற்கான பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அந்த முன்மொழிவை உடனடியாக பரிசீலிக்குமாறும் அமைச்சரவை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

உத்தேச புதிய மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் பிரேரணை ஒன்றின் பிரகாரம், இலங்கை மின்சார சபை தற்போதுள்ள மாதாந்த மின்சாரக் கட்டணத்தை 22% அதிகரிக்க முன்வந்துள்ளது. இரண்டாவது கட்டண திருத்த முன்மொழிவில் ஒரு அலகிற்கான கட்டண அறிவிப்பாக உயர்த்தப்படும் என்றுகே; தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply