MCC சர்வதேசக் கிரிக்கெட் குழு தலைவரானார் சங்ககாரா

மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் சர்வதேசக் கிரிக்கெட் குழுவின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் விதிமுறைகள் தொடர்பிலான விடயங்களை மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகம் பரிபாலனம் செய்து வருகிறது.

இந்த கழகத்தின் தலைவராக 2019 ஆம் ஆண்டு முதல் இரண்டு வருடங்களுக்கு குமார் சங்ககாரா தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இவரே இங்கிலாந்து தவிர்ந்த வெளிநாட்டவராக குறித்த பதவியை வகித்தார்.

தற்சயம் அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் இந்த குழுவில் அங்கத்தவராக கடமையாற்றிய நிலையில் இந்தப் பதவியை அவர் பெற்றுள்ளார். குமார் தர்மசேன, சரவ் கங்குலி, ஜுஹலன் கோஸ்வாமி, ஹீத்தர் நைட், சூஸ் பேட்ஸ், கிளரி கொனர், ஜஸ்டின் லங்கர், ஒய்ன் மோர்கன், ரமீஷ் ராஜா, கிரேம் ஸ்மித், ரிக்கி ஸ்கெரிட் ஆகியோர் அங்கத்தவர்களாக உள்ள குழுவுக்கு குமார் சங்ககாரா தலைவர் ஆகியுள்ளார்.

வருடத்துக்கு இரண்டு முறை சந்திப்புகளை ஏற்படுத்தி கிரிக்கெட்டில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் விவாதித்து அவற்றுக்கான தீர்வு மற்றும் விதிமுறை மாற்றங்களை பரிந்துரை செய்வதே இந்தக்குழுவின் பணி.

மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக இங்கிலாந்தை சேர்ந்த மார்க் நிக்லொஸ் தற்போது கடமையாற்றி வருகிறார்.

Social Share

Leave a Reply