56 பில்லியன் டொலர்கள் சக்திவாய்ந்தவர்களினால் வெளிநாட்டில் பதுக்கல்

இலங்கையின் பலம் மிக்கவர்களினால் வெளிநாடுகளில் 56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இன்று(03.10) தெரிவித்துள்ளார். இந்த பணம் இலங்கையின் முழுமையான கடனை செலுத்த போதுமானது எனவும் மேலும் அவர் கூறியுள்ளார்.

இந்த தொகையில் 9 பில்லியன் டொலர்கள் இந்த வருடத்தில் மட்டும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்த அமைச்சர், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்த நபர்களின் பணத்தை மீளக் கொண்டுவருமாறு உத்தரவிடுவதற்கான விசேட பிரேரணை ஒன்றை முன்மொழிகிறேன் எனவும் மேலும் கூறியுள்ளார். சில பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலர்கள் இதில் 150 மில்லியன் டொலர்களை பதுக்கியுள்ளதாகவும் மேலும் அவர் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply