நேபாளத்தில் 6.2 மற்றும் 4.6 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முதலாவது நிலநடுக்கம் 10 கி.மீ கடல் ஆழத்திலும், இரண்டாவது நிலநடுக்கம் 5 கி.மீ கடல் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என இலங்கை புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.