பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் ஏழாவது போட்டி ஆரம்பமாகியுள்ளது.
இந்தியா, தர்மசாலா மைதானத்தில் ஆரம்பித்துள்ள இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இங்கிலாந்து அணி நியுசிலாந்து அணியுடன் மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையில் அவர்களுக்கு இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று விளையாடுகிறது.
இங்கிலாந்தின் நீண்ட அதிரடியான துடுப்பாட்ட வரிசைக்கும், பங்களாதேஷ் அணியின் சுழற்பந்து வீச்சுக்கும் இடையிலான போட்டியாகவே இந்தப் போட்டி அமையவுள்ளது.
அணி விபரம்
பங்காளதேஷ் அணி: ஷகிப் அல் ஹசன் (தலைவர்), லிட்டொன் டாஸ், ரன்ஷித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ததௌஹித் ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், ஷேக் மஹேதி ஹசன், ரஸ்கின் அஹமட், முஸ்ரபைசூர் ரஹ்மான், ஷொரிஃபுல் இஸ்லாம்
இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (தலைவர்), ஜோனி பார்ஸ்டோவ், ஹரி புரூக், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆடில் ரஷிட், ஜோ ரூட், ரீஸ் ரொப்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ் .