காலி மற்றும் மாத்தறை மாவட்ட பாடசாலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (11.10) திறக்கப்படும் என தென் மாகாண கல்வி செயலாளர் அறிவித்துள்ளார்.

எனினும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளையும் இந்த வாரம் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.

இதனையடுத்து, தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் ஒக்டோபர் 12ம் திகதி ஆரம்பமாகவிருந்த தவணை பரீட்சைகளை காலவரையறையின்றி பிற்போடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் நாளை முதல் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply