ஒரு மாதத்திற்குள் நூறுக்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம்!

ஒக்டோபர் மாதத்தில் மட்டும் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக என சிறுவர் மற்றும் மகளிருக்கான பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இவ்வாறு பலாத்காரம் செய்யப்பட்டவர்களில் 10 பேர் தற்போது கர்ப்பமடைந்துள்ளதாக இன்று (10.11) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அவர்களில் 22 பேர் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply