ஸ்ரீலங்கா கிரிக்கெட் கோப் குழுவுக்கு அழைப்பு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தை பாராளுமன்றத்தின் பொது நிறுவனங்களுக்கான குழு(கோப்) முன்னிலயில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார இந்த அழைப்பை விடுத்துள்ளார். இம்மாதம் 14 ஆம் திகதி ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் பதவி விலக வேண்டுமென்ற சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறான நிலையில் ஆளும் எதிர்தரப்பு பாரளுமன்ற உறுப்பினர்கள் கோப் குழுவுக்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதனை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply