தென்னாபிரிக்காவோடு போராடிய ஆப்கானிஸ்தான்

தென்னாபிரிக்காவோடு போராடிய ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 42 ஆவது போட்டி இன்று அஹ்மதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. முதல் விக்கெட் வீழ்ந்தவுடன் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. அஸ்மதுல்லா ஓமர்சாய் சிறப்பாக துடுப்பாடி அவரது 4 ஆவது அரைச்சதத்தையும் இந்த உலககிண்ணத்தில் 3 ஆவது அரைச்சதத்தையும் பூர்த்தி செய்து கொண்டார். இதன் மூலமாகவே ஆப்கானிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. பந்துவீச்சில் எல்லோரும் சிறப்பாக பந்துவீசியிருந்தார்கள்.

தென்னாபிரிக்கா அணி இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெறுவதற்கு போராட வேண்டும்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓப46
ரஹ்மனுல்லா குர்பாஸ்பிடி – ஹெய்ன்ரிச் கிளாசன்கேசவ் மகராஜ்252231
இப்ராஹிம் ஷர்டான்பிடி – குயின்டன் டி கொக்ஜெரால்ட் கோட்ஸி153030
ரஹ்மத் ஷாபிடி – டேவிட் மில்லர்லுங்கி நிகிடி264620
ஹஷ்மதுல்லா ஷஹிதிபிடி – குயின்டன் டி கொக்கேசவ் மகராஜ்020700
அஸ்மதுல்லா ஓமர்சாய்   97 107 73 
இக்ரம் அலிகில்பிடி – குயின்டன் டி கொக்ஜெரால்ட் கோட்ஸி121411
மொஹமட் நபிபிடி – குயின்டன் டி கொக்லுங்கி நிகிடி020300
ரஷீட் கான்  143000
நூர் அஹமட்பிடி – குயின்டன் டி கொக்ஜெரால்ட் கோட்ஸி    
முஜீப் உர் ரஹ்மான்பிடி – எய்டன் மார்க்ரம்ஜெரால்ட் கோட்ஸி080501
நவீன் உல் ஹக் Run Out  02 04 0 0
உதிரிகள்  15   
ஓவர்  50விக்கெட்  10மொத்தம்244   
பந்துவீச்சாளர்ஓஓ.ஓஓட்டவிக்
ககிஷோ ரபாடா10004000 
லுங்கி நிகிடி8.3006902
எய்டன் மார்க்ரம்4.3002500
ஜெரால்ட் கோட்ஸி10014404
கேசவ் மகராஜ்10012502
அன்டிலி பெசுவாயோ07003601
     

தென்னாபிரிக்கா அணி விளையாடிய 8 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்று 12 புள்ளிகளோடு இரண்டாமிடத்தில் காணப்படுகிறது. இன்று வெற்றி பெற்றால் இரண்டாம் இடம் உறுதியாகும். தோல்வியடைந்தால் மூன்றாமிடத்துக்கு பின் செல்லும் நிலையும் உருவாகலாம். எப்படி இருந்தாலும் அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணியுடன் மோதுவதில் மாற்றம் வரப்போவதில்லை.

அணி விபரம்

ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மதுல்லா ஷஹிதி (தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஷர்டான், இக்ரம் அலிகில், ரஹ்மத் ஷா, மொஹமட் நபி, அஸ்மதுல்லா ஓமர்சாய், ரஷீட் கான்,முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், நூர் அஹமட்

தென்னாபிரிக்கா அணி: ரெம்பா பவுமா(தலைவர்), குயின்டன் டி கொக், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ரஷி வன் டேர் டுசென், , ககிஷோ ரபாடா, அன்டிலி பெசுவாயோ, ஜெரால்ட் கோட்ஸி

Social Share