ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 42 ஆவது போட்டி இன்று அஹ்மதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. முதல் விக்கெட் வீழ்ந்தவுடன் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. அஸ்மதுல்லா ஓமர்சாய் சிறப்பாக துடுப்பாடி அவரது 4 ஆவது அரைச்சதத்தையும் இந்த உலககிண்ணத்தில் 3 ஆவது அரைச்சதத்தையும் பூர்த்தி செய்து கொண்டார். இதன் மூலமாகவே ஆப்கானிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. பந்துவீச்சில் எல்லோரும் சிறப்பாக பந்துவீசியிருந்தார்கள்.
தென்னாபிரிக்கா அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த குயின்டன் டி கொக், ரெம்பா பவுமா ஆகியோர் 64 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். முதல் விக்கெட் வீழ்ந்தவுடன் அடுத்த விக்கெட்டும் வேகமாக வீழ்த்தப்பட்டது. 3 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த எய்டன் மார்க்ரம், ரஷி வன் டேர் டுசென் ஆகியோர் 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். 3 ஆவது விக்கெட் வீழ்ந்தவுடன் அடுத்த இரு விக்கெட்களும் சம இடைவெளிகளில் வீழ்த்தப்பட்டன. 6 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த அன்டிலி பெசுவாயோ, ரஷி வன் டேர் டுசென் ஆகியோர் 65 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன் அணியின் வெற்றிக்கும் உதவினர்.
ரஷி வன் டேர் டுசென் நிதானமாகவும் அதிரடியாகவும் துடுப்பாடி அவரது 14 ஆவது அரைச்சதத்தையும் இந்த உலககிண்ணத்தில் 2 ஆவது அரைச்சதத்தையும் பூர்த்தி செய்து கொண்டார்.
தென்னாபிரிக்கா அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 247 ஓட்டங்களை பெற்றது.
தென்னாபிரிக்கா அணி இந்த வெற்றியின் மூலமாக இரண்டாமிடத்தை தக்க வைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இந்த தோல்வியின் மூலமாக அரை இறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
குயின்டன் டி கொக் | L.B.W | மொஹமட் நபி | 41 | 47 | 2 | 3 |
ரெம்பா பவுமா | பிடி – ரஹ்மனுல்லா குர்பாஸ் | முஜீப் உர் ரஹ்மான் | 23 | 28 | 3 | 0 |
ரஷி வன் டேர் டுசென் | 76 | 95 | 6 | 1 | ||
எய்டன் மார்க்ரம் | பிடி – நவீன் உல் ஹக் | ரஷீட் கான் | 25 | 32 | 1 | 1 |
ஹெய்ன்ரிச் கிளாசன் | Bowled | ரஷீட் கான் | 10 | 13 | 1 | 0 |
டேவிட் மில்லர் | பிடி – மொஹமட் நபி | மொஹமட் நபி | 24 | 33 | 1 | 1 |
அன்டிலி பெசுவாயோ | 39 | 37 | 1 | 3 | ||
உதிரிகள் | 09 | |||||
ஓவர் 47.3 | விக்கெட் 05 | மொத்தம் | 247 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
முஜீப் உர் ரஹ்மான் | 10 | 00 | 51 | 01 |
நவீன் உல் ஹக் | 6.3 | 00 | 52 | 00 |
மொஹமட் நபி | 10 | 01 | 35 | 02 |
அஸ்மதுல்லா ஓமர்சாய் | 01 | 00 | 08 | 00 |
ரஷீட் கான் | 10 | 01 | 37 | 02 |
நூர் அஹமட் | 09 | 00 | 49 | 00 |
ரஹ்மத் ஷா | 01 | 00 | 12 | 00 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
ரஹ்மனுல்லா குர்பாஸ் | பிடி – ஹெய்ன்ரிச் கிளாசன் | கேசவ் மகராஜ் | 25 | 22 | 3 | 1 |
இப்ராஹிம் ஷர்டான் | பிடி – குயின்டன் டி கொக் | ஜெரால்ட் கோட்ஸி | 15 | 30 | 3 | 0 |
ரஹ்மத் ஷா | பிடி – டேவிட் மில்லர் | லுங்கி நிகிடி | 26 | 46 | 2 | 0 |
ஹஷ்மதுல்லா ஷஹிதி | பிடி – குயின்டன் டி கொக் | கேசவ் மகராஜ் | 02 | 07 | 0 | 0 |
அஸ்மதுல்லா ஓமர்சாய் | 97 | 107 | 7 | 3 | ||
இக்ரம் அலிகில் | பிடி – குயின்டன் டி கொக் | ஜெரால்ட் கோட்ஸி | 12 | 14 | 1 | 1 |
மொஹமட் நபி | பிடி – குயின்டன் டி கொக் | லுங்கி நிகிடி | 02 | 03 | 0 | 0 |
ரஷீட் கான் | 14 | 30 | 0 | 0 | ||
நூர் அஹமட் | பிடி – குயின்டன் டி கொக் | ஜெரால்ட் கோட்ஸி | ||||
முஜீப் உர் ரஹ்மான் | பிடி – எய்டன் மார்க்ரம் | ஜெரால்ட் கோட்ஸி | 08 | 05 | 0 | 1 |
நவீன் உல் ஹக் | Run Out | 02 | 04 | 0 | 0 | |
உதிரிகள் | 15 | |||||
ஓவர் 50 | விக்கெட் 10 | மொத்தம் | 244 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
ககிஷோ ரபாடா | 10 | 00 | 40 | 00 |
லுங்கி நிகிடி | 8.3 | 00 | 69 | 02 |
எய்டன் மார்க்ரம் | 4.3 | 00 | 25 | 00 |
ஜெரால்ட் கோட்ஸி | 10 | 01 | 44 | 04 |
கேசவ் மகராஜ் | 10 | 01 | 25 | 02 |
அன்டிலி பெசுவாயோ | 07 | 00 | 36 | 01 |
அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
இந்தியா | 08 | 08 | 00 | 00 | 16 | 2.456 |
தென்னாபிரிக்கா | 09 | 07 | 02 | 00 | 14 | 1.261 |
அவுஸ்திரேலியா | 08 | 06 | 02 | 00 | 12 | 0.861 |
நியூசிலாந்து | 09 | 05 | 04 | 00 | 10 | 0.743 |
பாகிஸ்தான் | 08 | 04 | 04 | 00 | 08 | 0.036 |
ஆப்கானிஸ்தான் | 09 | 04 | 05 | 00 | 08 | -0.336 |
இங்கிலாந்து | 08 | 02 | 06 | 00 | 04 | -0.885 |
பங்களாதேஷ் | 08 | 02 | 06 | 00 | 04 | -1.442 |
இலங்கை | 09 | 02 | 07 | 00 | 04 | -1.413 |
நெதர்லாந்து | 08 | 02 | 06 | 00 | 04 | -1.635 |
அணி விபரம்
ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மதுல்லா ஷஹிதி (தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஷர்டான், இக்ரம் அலிகில், ரஹ்மத் ஷா, மொஹமட் நபி, அஸ்மதுல்லா ஓமர்சாய், ரஷீட் கான்,முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், நூர் அஹமட்
தென்னாபிரிக்கா அணி: ரெம்பா பவுமா(தலைவர்), குயின்டன் டி கொக், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ரஷி வன் டேர் டுசென், , ககிஷோ ரபாடா, அன்டிலி பெசுவாயோ, ஜெரால்ட் கோட்ஸி