தென்னாப்பிரிக்காவிற்கு இரண்டாமிடம்

தென்னாப்பிரிக்காவிற்கு இரண்டாமிடம்

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 42 ஆவது போட்டி இன்று அஹ்மதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. முதல் விக்கெட் வீழ்ந்தவுடன் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. அஸ்மதுல்லா ஓமர்சாய் சிறப்பாக துடுப்பாடி அவரது 4 ஆவது அரைச்சதத்தையும் இந்த உலககிண்ணத்தில் 3 ஆவது அரைச்சதத்தையும் பூர்த்தி செய்து கொண்டார். இதன் மூலமாகவே ஆப்கானிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. பந்துவீச்சில் எல்லோரும் சிறப்பாக பந்துவீசியிருந்தார்கள்.

தென்னாபிரிக்கா அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த குயின்டன் டி கொக், ரெம்பா பவுமா ஆகியோர் 64 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். முதல் விக்கெட் வீழ்ந்தவுடன் அடுத்த விக்கெட்டும் வேகமாக வீழ்த்தப்பட்டது. 3 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த எய்டன் மார்க்ரம், ரஷி வன் டேர் டுசென் ஆகியோர் 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். 3 ஆவது விக்கெட் வீழ்ந்தவுடன் அடுத்த இரு விக்கெட்களும் சம இடைவெளிகளில் வீழ்த்தப்பட்டன. 6 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த அன்டிலி பெசுவாயோ, ரஷி வன் டேர் டுசென் ஆகியோர் 65 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன் அணியின் வெற்றிக்கும் உதவினர்.
ரஷி வன் டேர் டுசென் நிதானமாகவும் அதிரடியாகவும் துடுப்பாடி அவரது 14 ஆவது அரைச்சதத்தையும் இந்த உலககிண்ணத்தில் 2 ஆவது அரைச்சதத்தையும் பூர்த்தி செய்து கொண்டார்.

தென்னாபிரிக்கா அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 247 ஓட்டங்களை பெற்றது.

தென்னாபிரிக்கா அணி இந்த வெற்றியின் மூலமாக இரண்டாமிடத்தை தக்க வைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இந்த தோல்வியின் மூலமாக அரை இறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
குயின்டன் டி கொக்L.B.Wமொஹமட் நபி414723
ரெம்பா பவுமாபிடி – ரஹ்மனுல்லா குர்பாஸ்முஜீப் உர் ரஹ்மான்232830
ரஷி வன் டேர் டுசென்  769561
எய்டன் மார்க்ரம்பிடி – நவீன் உல் ஹக்ரஷீட் கான்253211
ஹெய்ன்ரிச் கிளாசன்Bowledரஷீட் கான்101310
டேவிட் மில்லர்பிடி – மொஹமட் நபிமொஹமட் நபி243311
அன்டிலி பெசுவாயோ  393713
       
       
       
       
உதிரிகள்  09   
ஓவர்  47.3விக்கெட்  05மொத்தம்247   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
முஜீப் உர் ரஹ்மான்10005101
நவீன் உல் ஹக்6.3005200
மொஹமட் நபி10013502
அஸ்மதுல்லா ஓமர்சாய்01000800
ரஷீட் கான்10013702
நூர் அஹமட்09004900
ரஹ்மத் ஷா01001200
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரஹ்மனுல்லா குர்பாஸ்பிடி – ஹெய்ன்ரிச் கிளாசன்கேசவ் மகராஜ்252231
இப்ராஹிம் ஷர்டான்பிடி – குயின்டன் டி கொக்ஜெரால்ட் கோட்ஸி153030
ரஹ்மத் ஷாபிடி – டேவிட் மில்லர்லுங்கி நிகிடி264620
ஹஷ்மதுல்லா ஷஹிதிபிடி – குயின்டன் டி கொக்கேசவ் மகராஜ்020700
அஸ்மதுல்லா ஓமர்சாய்  9710773
இக்ரம் அலிகில்பிடி – குயின்டன் டி கொக்ஜெரால்ட் கோட்ஸி121411
மொஹமட் நபிபிடி – குயின்டன் டி கொக்லுங்கி நிகிடி020300
ரஷீட் கான்  143000
நூர் அஹமட்பிடி – குயின்டன் டி கொக்ஜெரால்ட் கோட்ஸி    
முஜீப் உர் ரஹ்மான்பிடி – எய்டன் மார்க்ரம்ஜெரால்ட் கோட்ஸி080501
நவீன் உல் ஹக்Run Out 020400
உதிரிகள்  15   
ஓவர்  50விக்கெட்  10மொத்தம்244   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ககிஷோ ரபாடா10004000
லுங்கி நிகிடி8.3006902
எய்டன் மார்க்ரம்4.3002500
ஜெரால்ட் கோட்ஸி10014404
கேசவ் மகராஜ்10012502
அன்டிலி பெசுவாயோ07003601
     
அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
இந்தியா08080000162.456
தென்னாபிரிக்கா09070200141.261
அவுஸ்திரேலியா08060200120.861
நியூசிலாந்து09050400100.743
பாகிஸ்தான்08040400080.036
ஆப்கானிஸ்தான்0904050008-0.336
இங்கிலாந்து0802060004-0.885
பங்களாதேஷ்0802060004-1.442
இலங்கை0902070004-1.413
நெதர்லாந்து0802060004-1.635

அணி விபரம்

ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மதுல்லா ஷஹிதி (தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஷர்டான், இக்ரம் அலிகில், ரஹ்மத் ஷா, மொஹமட் நபி, அஸ்மதுல்லா ஓமர்சாய், ரஷீட் கான்,முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், நூர் அஹமட்

தென்னாபிரிக்கா அணி: ரெம்பா பவுமா(தலைவர்), குயின்டன் டி கொக், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ரஷி வன் டேர் டுசென், , ககிஷோ ரபாடா, அன்டிலி பெசுவாயோ, ஜெரால்ட் கோட்ஸி

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version