சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் தடை செய்யப்பட்டுள்ளது. சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் இலங்கை அரசாங்கம் தலையிட்டதனை தொடர்ந்து இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை பதவி விலகவேண்டுமென்ற சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சர்வதேசக் கிரிக்கெட் பேரவை இந்த தடையினை மேற்கொண்டுள்ளது.