ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்றைய தினம் (03.06) செவ்வாய்க்கிழமை மாலை மன்னாரில் இடம்பெற்றது.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்,
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் மற்றும் விகிதாசார உறுப்பினர்கள் கலந்து கொண்டு சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.
இதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஜோன்சன் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் சுயேட்சைக்குழு சார்பாக போட்டியிட்ட ஜி.எம்.சீலன் தலைமையிலான குழுவினரும் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியதோடு அவர்களது உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
குறித்த சத்தியபிரமாண நிகழ்வில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஆர் குமரேஸ்,புளொட் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் ஜேம்ஸ்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் ஜோன்சன்,சுயேட்சை குழுவின் தலைவர் ஜி.எம்.சீலன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்
