கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம்- திலீபன் MP சந்திப்பு!

மன்னார் நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் நேற்றைய தினம் (12.11) ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் அவர்களை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துள்ளனர்.

சுமார் இரண்டாயிரம் கால்நடைகள் மேய்ச்சல் தரையின்றி அல்லலுறும் அவலத்திற்குத் தீர்வு வேண்டியே கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

புல்லறுத்தான் கண்டல் மேய்ச்சல் தரையை விடுவிக்க கோரி எழுத்து மூலமும் நேரடியாகவும் பலதடவைகள் முயற்சித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து எந்த வித பதிலும் கிடைக்காமையினால் இது தொடர்பாக சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பேசி உடனடியாகத் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு பாராளுமன்ற உறுப்பினரிடம் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினர் கோரியுள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் முன்னிலையிலேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசிய பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் அவர்கள் நாளைய தினமே இதற்கான ஒரு தீர்வைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இதனிடையே கடந்த 26/10 அன்று மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மன்னார் புல்லறுத்தான்கண்டல் மேய்ச்சல் தரையை விடுவிக்கக் கோரி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்ததும், மாவட்டச்செயலகத்தின் பிரதம கணக்காளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

Social Share

Leave a Reply