இருநாட்டு தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி; ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இன்று (15/11) காணொளி வழியாக சந்திக்கவுள்ளனர்.

இதனை வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அதற்கமைய குறித்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என அறியமுடிகிறது.

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை என்பதுடன், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் மோதல் நிலை நிலவி வருகிறது.

வர்த்தகப் போர், கொரோனா பரவல் விவகாரம் என பல்வேறு பிரச்சினைகளால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனும், சீன கம்யூனிஸட் கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினருமான யாங் ஜீச்சியும் சுவிட்;சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் கடந்த மாதம் சந்தித்தனர். அப்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் காணொளி வழியாக சந்திப்பு இடம்பெறுமென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருநாட்டு தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு

Social Share

Leave a Reply