ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் நாளை (16/11) முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க கோரி பொலிஸார் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டிருந்த சுற்றுநிரூபத்திற்கு அமைவாகவே இந்த தடை உத்தரவு கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொவிட் தொற்று பரவல் காரணமாக நீண்டகாலமாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு சிறிது நாட்களிலேயே இவ்வாறு பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது முறையல்ல என சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதற்கமைய பொலிஸ் தரப்பினால் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் தடை உத்தரவு கோரிக்கை முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.