நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை!

சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், தே.மு.தி.கவின் கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்த்தின் உடல்நிலை சீராக இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சில மணி நேரங்களுக்கு முன்னர், முன்னேற்றமான நிலை தென்பட்டபோதிலும், தற்போது மீண்டும் சீறின்றி இருப்பதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கழுத்தோடு இணையும் முதுகுத்தண்டில் சிக்கல் இருப்பதால், அவருக்கு ஞாபக சக்தியில் குறைபாடு ஏற்பட்டிருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாரும் அவரைச் சென்று பார்க்க கடந்த ஒரு மாதமாகவே அனுமதிக்கப்படவில்லை எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பலரின் மனங்கவர், பிரபல நடிகரும் சிறந்த அரசியல்வாதியுமான அவர் நலமுடன் திரும்ப பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply