கிழக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து பாரியளவிலான வியாபாரம் செய்து வந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் வாழச்சேனை பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினறால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவரிடமிருந்த 2,500 போதை வில்லைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த போதைப்பொருள் வியாபாரி காரில் பயணித்தபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு அரசடி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.