”ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தேவையில்லை” – மைத்ரிபால

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை தேவையில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (05.12) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானதும் 99 வீதமான தாய்மார்களும் பிள்ளைகளும் வீடுகளில் அழுது புலம்புவதாக தெரிவித்த அவர், வினாத்தாள்களும் மிகவும் கடினமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ளது போன்று ஐந்தாண்டு புலமைப்பரிசில் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும், தான் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் அதனை நிறைவேற்ற முயற்சித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பல அபிவிருத்தியடைந்த நாடுகளில் எட்டாம் ஆண்டு வரை தவணைப் பரீட்சை இல்லை எனவும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் சுமையாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply