மத்தல விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து புதிய அறிவிப்பு!

மத்தல சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய-இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ். ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

அந்த செயற்பாடுகளை மாற்றுவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த சில வாரங்களில் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எனவும் அதன் பின்னர் நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply