சிறுவர்களுக்கு ஆபாச காணொளிகளை காண்பித்த பாடசாலை உதவியாளர் கைது!

மூன்று சிறுமிகள் மற்றும் இரண்டு சிறுவர்களை முத்தமிட்டு, பின்னர் தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை காட்டிய பாடசாலை அலுவலக உதவியாளர் ஒருவர் வென்னப்புவ பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

வென்னப்புவ – மிரிஸ்ஸங்கொடுவ பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லுனுவில பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தின் போது குறித்த வகுப்பறையில் ஆசிரியர் எவரும் இருக்கவில்லை எனவும் அதிபர் வழங்கியுள்ள முறைப்பாட்டில் சுட்டிக்காப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மாரவில நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Social Share

Leave a Reply