களனி பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த 03 பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீள ஆரம்பமாகவுள்ளன.
இதன்படி, வர்த்தகம் , முகாமைத்துவ பீடம் , விஞ்ஞான பீடம், கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம் என்பவற்றின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
மானுடவியல் மற்றும் சமூகவியல் பீடத்தினை எதிர்வரும் 18 ஆம் திகதி திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் குறித்த 04 பீடங்களும் கடந்த 04 ஆம் திகதி மூடப்பட்டன.
பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டமை, மேலும் அதிகாரிகள் இருவரை கடத்திச்சென்று தடுத்து வைத்திருந்தமை தொடர்பான சம்பவங்கள் பதிவானதையடுத்து குறித்த பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.