பண்டிகை காலத்தில் எகிறும் முட்டை விலை!

பண்டிகை காலத்தைத்தில் முட்டை ஒன்றின் விலை 55 முதல் 60 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் இறுதி வாரமளவில் வெள்ளை முட்டையின் விலை 40 ரூபாய் முதல் 42 ரூபாய் வரையிலும், கடந்த வாரம் ஒரு வெள்ளை முட்டையின் விலை 44 ரூபாய் முதல் 46 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் எதிர்வரும் நத்தார் பண்டிகை காலத்தில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

முட்டை விலை உயர்வால் கேக், இனிப்பு வகைகளின் விலையையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என வெதுப்பாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply