இலங்கை கிரிக்கெட் அணியை தெரிவு செய்வதற்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட 10 பேரடங்கிய குழுவிலிருந்து ஐவர் அடங்கிய குழு விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
உப்புல் தரங்க தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 37 வயதான இவர் இன்னமும் முதற்தரப்போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த குழுவில் அஜந்த மென்டிஸ், இந்திக டி சேரம், டில்ருவான் பெரேரா, தரங்க பரணவித்திரான ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டு அமைச்சினால் நியமிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சபையினால் 7 பேரடங்கிய தெரிவுக்குழு பரிந்துரை செய்யப்பட்ட போதும், விளையாட்டு அமைச்சர் ஐந்து பேரடஙகிய குழுவுக்கே நியமனம் வழங்கியுள்ளார்.