அண்மையில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள 03 MRI ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்காலிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் இல்லாமையால் இந்த இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், சுகாதார அமைப்பில் ஏற்படும் மின்தடை இயந்திரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், நீண்ட கால மின்தடை ஏற்படும்போது, நவீன இயந்திரங்களுக்கு மின்சாரம் வழங்க முடியவில்லை என்பதால் அவற்றில் குளிர்ச்சி நிலையை பேண முடியவில்லை எனவும், இந்நிலையில் தேசிய மருத்துவமனையில்உள்ள MRI ஸ்கேன் செய்யும் 4 இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் தற்போது பழுதடைந்துள்ளதாகவும், குளிரூட்டும் அமைப்பை இயக்க முடியாததால் இந்த இயந்திரங்களை தற்போது இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.