காசாவில் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டுள்ளது.
193 உறுப்பினர்களை கொண்ட பொதுச் சபையில், குறித்த யோசனைக்க ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 153 உறுப்பு நாடுகள் காசாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
அத்துடன் 10 நாடுகள் குறித்த யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளதுடன் 23 நாடுகள் வாக்களிலிப்பிலிருந்து விலவியுள்ளன.
இவ்வாறு எதிராக வாக்களித்த நாடுகளில் அமெரிக்கா, பரகுவே, ஆஸ்திரியா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, பிரித்தானியா, ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.