குடியரசுகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசின் உரித்துரிமை மக்களுக்கே சொந்தமானதெனும் எண்ணக்கரு வளர்ச்சியடைந்தது. அரசும் அரச நிறுவனங்களும் பராமரிக்கப்படுவது பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து ஆகும். எனவே பொதுமக்களின் நிதியிலிருந்து அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களிடம் காணப்படல் வேண்டுமென்பது அடிப்படையான எண்ணக்கரு ஆகும்.
இந்த உரிமையை சிறந்த முறையில் பேணிப் பாதுகாப்பதற்கு மூவகையான அடிப்படைத் தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
தகவல்களுக்கு அணுகுதல்
இதன் மூலம் கருதப்படுவது யாதெனில் மக்களுக்குத் தேவையான தகவல்களை தடையின்றி பெற்றுக்கொள்வதற்கான ஆற்றல் ஆகும். தகவல்களின் கிடைப்பனவு மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் ஊடகங்கள் தடையின்றி சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்படலே இதன் கருத்து ஆகும். விசேடமாக வெகுஜன ஊடகங்கள் தணிக்கை அல்லது தடையின்றி சுதந்திரமாகவும் தலையீடுகள் அற்ற விதமாகவும் செயற்பட வேண்டுமென்ற விடயம் முக்கியத்துவம் பெறுகிறது.
தகவல்களை வெளிப்படுத்துதல் தொடர்பில் அரச நிறுவனங்களின் பொறுப்பு
மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சகல தகவல்களையும் பெற்றுக்கொள்ளக்கூடிய இலகுவான ஊடகங்கள் மூலம் மக்களுக்கு வழங்குவதற்கான பொறுப்பு அரச நிறுவனங்களிடம் காணப்படல் வேண்டும். மக்களுக்கு கிடைப்பனவாகவுள்ள ஊடகங்களினூடாக மக்கள் எழிதாகப் புரிந்துகொள்ளக் கூடியவாறு ஏற்புடைய தகவல்களை வழங்குதல் அரசின் பொறுப்பு ஆகும்.
தகவல்களைச் சமர்ப்பிப்பதற்கான பொறுப்பு
குறித்த நபர்கள் தொடர்பான தகவல்கள் கோரப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த அத்தகவல்களை வழங்குவதற்கான கடப்பாட்டினை இது குறிக்கின்றது. அரச இரகசியங்கள் போன்ற தகவல்களை ஒருசில வரையறைகளுக்கு உட்பட்டு அரச நிறுவனங்களிலிருந்து கோருவதற்கான உரிமை மக்களிடம் காணப்படல் வேண்டும். மக்களுக்கு ஏற்புடைய தனிப்பட்ட ரீதியான தகவல்களையும் மக்களின் வரிப்பணத்திலிருந்து மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களையும் மக்களுக்கு வழங்கும் பொறுப்பினை அரச அலுவலர்கள் கொண்டுள்ளனர். இத்தகவல்களை தாமதமின்றி சரியானவாறு பெற்றுக்கொள்ளல் மக்களது உரிமை ஆகும்.
அரச அலுவலர்களுக்கான உதவி
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு
அறை எண் 203, பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபம், பூதஹலோக மாவத்தை, கொழும்பு 07.
+94 11 269 1625
நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு
163, கிருளபன மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.
+94 11 251 3459, +94 11 251 3460, +94 11 251 2321, +94 11 251 3498
பிரசைகளுக்கான உதவி
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு
அறை எண் 203, பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபம், பூதஹலோக மாவத்தை, கொழும்பு 07.
+94 11 269 1625
நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு
163, கிருளபன மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு – 05
+94 11 251 5700
Fax : 11 251 5701
இலங்கை பத்திரிகை நிறுவனங்கள்
Home
இலங்கைapd; சர்வதேச வெளிப்படைத்தன்மை
ENVIHOME