மேலும் 15 மில்லியன் முட்டைகள் நாட்டிற்கு..!

மேலும் 15 மில்லியன் முட்டைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த முட்டைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் 10 மில்லியன் முட்டைகள் தொடர்பான அறிக்கை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடமிருந்து எதிர்வரும் சனிக்கிழமை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், முட்டை விநியோக நடவடிக்கைகளும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, சதொச விற்பனை நிலையங்களுக்கு நாளாந்தம் 2 மில்லியன் முட்டைகள் விநியோகிக்கப்படும் அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply