ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் “கிரிக்கெட் ஆலோசகர்” பதவிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா ஒரு வருடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். உடனைடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமன வழங்கப்பட்டுள்ளதாக கடந்த 14 ஆம் திகதி ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.ஆர்.பிரேமதாச மைதானத்தில் அமைந்துள்ள உயர் திறமை வெளிப்படுத்துகை மையத்தில் பொறுப்புகளை ஏற்றுள்ளார்.
தேசிய அணி தனது திறமைகளை வெளிப்படுத்துதவதற்கான நிகழ்ச்சி திட்டம், தொழில்சார் திறமைகளை வெளிப்படுத்துதல், மற்றும் பயிற்றுவிப்பாளர் உத்தியோகஸ்தர்களது திறமை வெளிப்பாடுகளை வெளிக்கொண்டு வருதல் மற்றும் அவற்றை கண்காணித்தல் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
உயர் திறமை வெளிப்படுத்துகை நிலையத்தில் வீரர்களது பயிற்சிகளுக்கான தேவைகளை கண்காணித்தல், வசதி வாய்ப்புகளை வழங்குதல், வீரர்களின் தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டு வருதல், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீரர்கள் முகாமைத்துவ திட்டத்தை உரிய முறையில் செயற்படுத்தி கண்காணித்தல் பொறுப்பும் சனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய திட்டங்களை முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி திறமைகள் மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்தல் நடவடிக்கைகளை கையாளும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.