குற்றச்செயல்களை இல்லாது ஒழிப்பதே எனது இலக்கு – திரான் அலஸ்

நாட்டின் இடம்பெற்றுவரும் குற்றங்களை இல்லாதொழிக்கும் இலக்கை தாம் கொண்டிருப்பதாகவும், அந்த இலக்கை யாரேனும் தடுத்தால் அவர்களைத் தாக்கவும் தயாராக இருப்பதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு “பலம்” உள்ளவர்களாக இருந்தாலும் தாம் அப்படித்தான் நடந்து கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற பொலிஸ் செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொது பாதுகாப்பு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பல குற்றச்செயல்களுக்கு ஆதரவாக இருக்கும் பலரின் ஆட்டத்தை விரைவில் நிறுத்துவதாகவும், அதன்போது
பொலிஸாருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்குத் துணை நிற்பேன் என பொது பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply