சுகாதர சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதர நடைமுறைகள் இன்று(15/11) அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பொது ஒன்று கூடல்கள், கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்படுவதாக சுகாதர சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணரட்ன தெரிவித்துள்ளார்.
நாளையதினம் தொடக்கம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் சில தடைகள் நீக்கப்படுவதோடு, மேலும் சில நடைமுறைகள் இலகுபடுத்தப்படுகின்றன.
உயர்தர, சாதாரண தர மாணவர்களுக்கு 50 சதவீத மாணவர்களோடு வகுப்புகள் நடாத்த அனுமதி. ஜிம் நிலையங்களை 50 சதவீதமானவர்களாக உயர்த்தப்பட்டுளள்து,
திரையரங்குகளின் பார்வையாளர்கள் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் வழமை போல இயங்க முடியும், முன் பள்ளிகள் முழுமையான மாணவர்களோடு இயங்கலாம். பொது போக்குவரத்து சேவைகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணிக்கலாம்.
ஆலயங்களில் தனிநபர் வழிபாடுகளில் ஈடுபட முடியும். திருமண நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் இல்லை.