ஸ்ரீ லங்கா டெலிகொம் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிபகிஷ்கரிப்பு 9வது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
நேற்றைய தினம் கூடிய பணிப்பாளர் சபையிலும் கோரிக்கைகளுக்கேற்ற தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லையென இலங்கை அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜகத் குருசிங்க தெரிவித்துள்ளார்.
டெலிகாம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கும் தற்போதைய நிர்வாகத்துக்கும் எதிராகவே இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.