யுக்திய திடீர் சுற்றி வளைப்பில் மன்னாரில் 70 பேர் கைது..!

போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய திடீர் சுற்றி வளைப்பில் மன்னாரில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் கடந்த வாரம் முதல் முன்னெடுக்கப்பட் “யுக்திய” நடவடிக்கையின் போது மன்னார் மாவட்டத்தில்; 27.6 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதுடன் 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 28.01 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதையடுத்து 13 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் 160.47 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் 29 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, மாவா போதைப்பொருள்; 386 கிராமும் மதகமொத போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளடன் 19 ஆயிரத்து 994 குளிசைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னார் மற்றும் அடம்பன் பகுதியிலேயே அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply