யாழ் – மன்னார் பிராதான வீதியில் பஸ்ஸொன்று மோதியதில் கால்நடைகள் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதியில்; பஸ்ஸொன்று மோதியதில் கால்நடைகள் சில சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன.

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த கால்நடை உரிமையாளர், பஸ் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் பஸ்ஸினையும் சேதப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த பஸ் சாரதி மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply