ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் நிறைவு

ஐக்கிய மக்கள் சக்தியின் “சாபமிக்க அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்” என்ற தொனிப்பொருளிலான போராட்டம் இன்று பிற்பகல் கொழும்பில் எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்திற்கு முன்னதாக ஆரம்பித்து, காலிமுகத்திடலுக்கு அருகில் நிறைவடைந்துள்ளது.

இலங்கையின் பல மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் கொழும்புக்கு நோக்கி வருகை தந்த போதும் அவர்கள் கொழும்பு வராமல் பொலிஸாரால் தடை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். திருப்பி அனுப்பபட்டவர்கள் அந்ததந்த இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் இது சிறியளவிலான ஆரம்பமே. தொடர்ந்தும் இது போன்ற போராட்டங்கள் நடாத்தப்படுமென தெரிவித்தனர். நாட்டை காப்பற்றுவதற்கான போராட்டம் இதுவென எதிர்க்கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆயிரமாயிரம் சவால்கள், எண்ணற்ற தடைகளுக்கு மத்தியில் வந்த மக்கள் திரள், சர்வாதிகார அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஆரம்பம் என்பதை நிரூபித்துள்ளதாகவும் அந்த மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் உரையாற்றும் போது தெரிவித்தார்.

“ஆட்சியிலுள்ள அரசாங்கம். ஐக்கிய மக்கள் சக்திக்கு பயந்து போயுள்ளதாக” தெரிவித்த சஜித், “நாட்டை வெல்லும் மக்கள் போராட்டத்தை ஆரம்பிப்போம்”எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

Social Share

Leave a Reply