பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மண்டைதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி தாக்குதல் நடத்திய இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவொன்று மண்ணெண்ணெய் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட போத்தல்களில் திரியிட்டு தயாரிக்கப்பட்ட பல மண்ணெண்ணெய் குண்டுகள் அதிகாரிகளை குறிவைத்து பொலிஸ் நிலையத்தின் மீது வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு குண்டு பொலிஸ் சாவடி மீது விழுந்து தீப்பிடித்துள்ளதுடன், ஏனைய குண்டு அனைத்தும் சாலையில் விழுந்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply